search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69). இவரது மனைவி நீலாவதி (49).

    இவர்கள் குடியாத்தத்தில் இருந்து ஆரணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    கொங்கராம்பட்டு கிராம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாவதி உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நெமிலி:

    அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவ ருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.

    துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி அடுத்த கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (வயது 45), கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய டி.புதூர் கிராமத் தைச் சேர்ந்த குப்பன் (60) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள மூனாண்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாதேவன் (32). இவர் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரடிக்கல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் கீழஉரப்பனூரை சேர்ந்த வேன் டிரைவர் பாஸ்கரன் மகன் பரண் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் 60 அடி ரோடு இருதயராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் முருகேசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா (வயது 55).

    இவர், சம்பவத்தன்று தக்கோலம் அருகே உள்ள மாரிமங்கலம் கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    பின்னர், வசந்தா வீட்டிற்கு வருவதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கடம்பநல்லூர் -பரமேஸ்வரமங்களம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென் மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தா கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

    • வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், திருவத்திபுரம், ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சேரன் (வயது 56). அரசு ஊழியர்.

    நேற்று வேலை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் செய்யாறு சாலை வழியாக கன்னியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சேரன் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற ரோடு ரோலர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கீழே விழுந்து தலை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேரனை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆற்காடு ரத்தனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சேரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சேரன் அக்கா மகன் செந்தில்குமார் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவ ரின் மனைவி வள்ளியம்மாள் (வயது 65), இவர் நேற்று பாக்கி ஷாப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பே ரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 17). இவர்மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பிலாஞ்சி அருகே சென்றபோது எதிரே வந்த மொபட் பிரவீன் சென்ற பைக் மீது மோதியது. இதில் பிரவீன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). கட்டிட மேஸ் திரி. இவரது மனைவி ரூபா வதி (30). தம்பதிகளுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கணவன்- மனைவி சாவு

    தீனதயாளன் நேற்று மாலை அவரது மனைவி ரூபாவதியுடன் வேடல் காந்திநகரில் இருந்து பைக்கில் அரக் கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தீனதயாளனின் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகிய இருவ ரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    டிரைவர் கைது

    இதில் கணவன், மனைவி இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சோளிங்கரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சலீம் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு சரவணன், குகன் (வயது 27), என்ற மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    சரவணனுக்கும், ஜெயலட்சுமிக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். குகன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். குகனுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக நேற்று குகன் ஆற்காட்டில் உள்ள உறவினர்களுக்கு சொல்ல தனது பைக் மூலம் ஆற்காட்டிற்கு சென்றார்.

    பின்னர் ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குகன் ஓட்டி பைக் மீது மோதியது. இதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த குகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜோதி (வயது 50). இவர்களுக்கு அரிகிருஷ்ணன், கணேஷ், என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவரது மூத்த மகன் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த ஜோதி தவறி கீழே விழுந்ததில் பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்பூலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதித்தபோது டாக்டர்கள் ஜோதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து ஜோதியின் மகன் கணேஷ் (23) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. அவரது மனைவி சந்திரா (வயது 47). இவர், கடந்த மாதம் 29-ந்தேதி ஆரணி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த சந்திராவுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4-வது மகளுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×